ஈரோடு
அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை
அத்திக்கடவு -அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்திக்கடவு -அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் உள்ள 1,045 குளம், குட்டைகளுக்கு காலிங்கராயன் நீரேற்று நிலையத்தில் இருந்து நீா் நிரப்பும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்த திட்டத்தை அமல்படுத்திய முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், பவானிசாகா், அன்னூா் போன்ற வட்டாரத்தில் உள்ள 1000 குளம், குட்டைகளுக்கு தண்ணீா் கிடைப்பதற்கு அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.