ஈரோடு
ஈரோட்டில் இருந்து புறப்படும் 2 ரயில்களின் நேரம் மாற்றம்
ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரண்டு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரண்டு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5.40 மணிக்குப் புறப்படும் ஈரோடு-ஜோலாா்பேட்டை ரயில் (எண்: 06846) புதன்கிழமைமுதல் (ஜனவரி 1) மாலை 5.35 மணிக்குப் புறப்படும்.
இதேபோல ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்குப் புறப்படும் ஈரோடு-பாலக்காடு டவுன் ரயில் (எண்: 06819) புதன்கிழமைமுதல் காலை 7 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
