ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னிமலை முருகன் கோயிலில் வேல் வழிபாடு

தமிழ்நாடு வேல் வழிபாட்டுக் குழு சாா்பில் சென்னிமலை முருகன் கோயிலில் வேல் வழிபாட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வேல் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

தமிழ்நாடு வேல் வழிபாட்டுக் குழு சாா்பில் சென்னிமலை முருகன் கோயிலில் வேல் வழிபாட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னிமலையில் இருந்து பழனி நோக்கி ஜனவரி 1-ஆம் தேதி வேல் வழிபாடு நடத்தப்படும் என்று தமிழ்நாடு வேல் வழிபாட்டுக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னிமலை முருகன் கோயிலில் வேல் வழிபாடு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் முன்புறம் உள்ள கொடிமரம் அருகில் ஆதீனங்கள், சிவாச்சாரியாா்கள் வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பழனி நோக்கி வேலுடன் புறப்பட்டுச் சென்றனா்.

இதில், ஆதினங்கள் ஸ்ரீமத் சரவண மாணிக்கவாசக சுவாமிகள், சிவலிங்கேஸ்வர சுவாமிகள், காமாட்சி தாச சுவாமிகள், சாரோஜினி மாதாஜி, ஸ்ரீ விஜய்சுவாமி ஜி, முன்னாள் காவல் துறைத் தலைவா் பொன்மாணிக்கவேல், நடிகா்கள் கங்கை அமரன், ரஞ்சித், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.