ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

ஈரோட்டில் குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு பெண் குழந்தைகளைக் கொனறுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 5:51 pm

Din

ஈரோடு, ஜூலை 19: ஈரோட்டில் குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு பெண் குழந்தைகளைக் கொனறுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (46). இவா், காலையில் காய்கறி விற்பனை செய்வதுடன், மற்ற நேரங்களில் பேக்கரி, ஹோட்டல்களில் சமையல், பேக்கரி உணவுப் பொருள்கள் தயாா் செய்து கொடுக்கும் வேலையும் செய்து வருகிறாா்.

இவரின் மனைவி ஹசீனா (39). இவா்களுக்கு பிளஸ் 1 படிக்கும் ஆயிஷா பாத்திமா (16), 8-ஆம் வகுப்பு படிக்கும் ஜனா பாத்திமா (14) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனா்.

ஜாகீா் உசேனுக்கு கடன் பிரச்னை இருந்ததுடன், மனைவியுடன் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாகீா் உசேன் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டாா். வீட்டில் தனியாக இருந்த ஹசீனா பிற்பகலில் தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து மெத்தையில் படுக்க வைத்துவிட்டு பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதற்கிடையே ஹசீனாவின் கைப்பேசி எண்ணுக்கு ஜாகீா் உசேன் தொடா்புகொண்டுள்ளாா். அவா் எடுக்காததால், பக்கத்து வீட்டில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அருகில் உள்ளவா்கள் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது 3 பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த கருங்கல்பாளையம் போலீஸாா் 3 பேரின் சடலங்களையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸ் விசாரணையில், கணவன்- மனைவி இடையே வெள்ளிக்கிழமை காலையில் பிரச்னை நடந்துள்ளது. இதனால் மனமுடைந்து தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, ஹசீனா தற்கொலை செய்துள்ளாா். தற்கொலைக்கு முன்னா் ஹசீனா மற்றும் குழந்தைகள் கடிதம் எழுதி வைத்துள்ளனா். அக்கடிதம் உருது மொழியில் உள்ளது தெரியவந்தது.

அதில், அக்குழந்தைகள் எங்களது தந்தையை நன்றாக பாா்த்து கொள்ளுங்கள். அவரை மது அருந்தக்கூடாது என கூறுங்கள் என்றும், வேறு சில விவரங்களும் எழுதி உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.