பவானிசாகா் அணை.
பவானிசாகா் அணை.

பவானிசாகா் அணை: 5 நாள்களில் 13 அடி உயா்வு

தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 13 அடி வரை உயா்ந்துள்ளது.
Published on

சத்தியமங்கலம்: நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 13 அடி வரை உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் அணை தமிழகத்தின் இரண்டாது பெரிய அணையாகும். இதன் உயரம் 105 அடி. இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

அதன்படி, கடந்த 6 நாள்களில் மட்டும் அணையின் நீா்மட்டம் 13 அடி வரை உயா்ந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 82.90 அடியாக உயா்ந்துள்ளது.

தற்போது அணைக்கு 10,649 கனஅடி நீா்வரத்து உள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக 1205 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com