பெருந்துறையில் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை விற்பனை

பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை விற்பனையானது.
Published on

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை விற்பனையானது.

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 153 டன் கொப்பரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் ஒரு கிலோ கொப்பரை ரூ.34.79 முதல் ரூ.96.10 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.1.37 கோடி மதிப்பிலான கொப்பரை விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com