மைலம்பாடியில் ரூ.19 லட்சத்துக்கு எள் விற்பனை

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19 லட்சத்துக்கு எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19 லட்சத்துக்கு எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு 201 மூட்டைகள் எள் வரத்து இருந்தது. வெள்ளை ரகம் கிலோ ரூ.103.19 முதல் ரூ.141.99 வரையும், கருப்பு ரகம் கிலோ ரூ.103.69 முதல் ரூ.ரூ.144.99 வரையும், சிவப்பு ரகம் கிலோ ரூ.96.69 முதல் ரூ.141.99 வரையும் ஏலம் போனது.

மொத்தம் 14,610 கிலோ எள் ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 576-க்கு விற்பனையானது.

தேங்காய், கொப்பரை விற்பனை

820 தேங்காய்கள் கிலோ ரூ.7.89 முதல் ரூ.9.90 வரையில் ரூ.6979-க்கும், 13 மூட்டைகள் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) கிலோ ரூ.64.69 முதல் ரூ.91.29 வரை ரூ.32,122-க்கும் விற்பனையாயின.

X
Dinamani
www.dinamani.com