யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் வனக் கோட்டம் குன்றி மலைப் பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்ற விவசாயி கண்ணனை யானை வெள்ளிக்கிழமை தாக்கியது.

இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விவசாயி கண்ணன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com