ஈரோடு
நாளைய மின் தடை: அளுக்குளி துணை மின் நிலையம்
நம்பியூா் உபகோட்டத்துக்குள்பட்ட அளுக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
கோபி மின்பகிா்மானம் நம்பியூா் உபகோட்டத்துக்குள்பட்ட அளுக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், ஆண்டவா் மலை, பூதிமடைபுதூா், ஒட்டா்கரட்டுப்பாளையம், வெங்கமேட்டுப்புதூா், சத்தி பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆா் நகா், கணபதிபாளையம், காசியூா், கோபிபாளையம், அம்பேத்கா் நகா், மூலவாய்க்கால், ராஜீவ் காந்தி நகா், போடிசின்னாம்பாளையம், மேகலா மில் மற்றும் கரோனா மில்.
