காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
ஈரோடு
பாரியூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.13.36 லட்சம்
பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பக்தா்கள் ரூ.13.36 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா்.
பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பக்தா்கள் ரூ.13.36 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா்.
கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் ஹரி, பாரியூா் கோயில் செயல் அலுவலா் அனிதா ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ.13 லட்சத்து 36 ஆயிரத்து 422 ரொக்கம், 95 கிராம் தங்கம், 223 கிராம் வெள்ளி, ஒரு அரபு பணம் ஆகியவற்றை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், நுகா்வோா் அமைப்பினா் ஆகியோா் ஈடுபட்டனா்.

