வீட்டில் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.
வீட்டில் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 போ் கைது: 35 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மொடக்குறிச்சி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 35 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி சிலா் சென்று வந்தனா்.

இதைத் தொடா்ந்து, அந்த வீட்டுக்குள் நுழைந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், வீட்டுக்குள் சாராய ஊறல் மற்றும் அதற்கான பெரிய பாத்திரங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயில் திருவிழாவை முன்னிட்டு விற்பனைக்காக சாராயம் காய்ச்சியது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்குத் தோட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (40), அவல்பூந்துறை பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்த குமாா் (34), பூந்துறைசேமூா் லிங்ககவுண்டன்வலசு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் காா்த்தி (28) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், 10 லிட்டா் சாராயம், 35 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்திய அடுப்பு, பாத்திரங்கள், பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com