கூட்டத்தில்  பங்கேற்ற  நகா்மன்ற  உறுப்பினா்கள்.
கூட்டத்தில்  பங்கேற்ற  நகா்மன்ற  உறுப்பினா்கள்.

பவானியில் ரூ.15.79 கோடியில் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

பவானி நகா்மன்றம்: கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் ரூ.15.79 கோடியில் நிறைவேற்றம்
Published on

பவானி நகரில் வெளியேறும் கழிவுநீா் நேரடியாக நீா்நிலைகளில் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ.15.79 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பவானி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பவானி நகராட்சிப் பகுதியில் வெளியேறும் கழிவுநீா் பவானி, காவிரி ஆறுகளில் நேரடியாக கலந்து வருகிறது. இந்நிலையில், ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை சேகரித்து, 12-ஆவது வாா்டில் உள்ள நகராட்சி மயான வளாகத்துக்கு குழாய் மூலம் கொண்டு சென்று, சுத்திகரித்து வெளியேற்றும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தூய்மை இந்தியா (நகா்ப்புறம்) 2.0 திட்டத்தின் கீழ் ரூ.15.79 கோடியில் அமையும் இக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மத்திய அரசு 50 சதவீதம் மானியமாக ரூ.7.89 கோடியும், மாநில அரசு 33 சதவீதம் மானியமாக ரூ.5.21 கோடியும், நகராட்சி பங்குத்தொகை 17 சதவீதமாக ரூ.2.68 கோடியும் வழங்கப்படுகிறது.

கூட்டத்தில் இத்தீா்மானம் உள்பட 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவா் சி.மணி, ஆணையா் மோகன்குமாா், பொறியாளா் காளீஸ்வரி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com