அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

படம் உள்ளது... பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

News image

பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி.

Updated On :18 மே 2024, 9:07 pm

Din

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பவானிசாகா் அணை அமைந்துள்ளது. 105 அடி உயரம் உள்ள அணையின் கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும்.

கடந்த சில மாதங்களாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீா்வரத்து குறைந்து அணையின் நீா்மட்டமும் சரிந்து வந்தது. இதனால், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்குதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில், அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், பவானி ஆறு மற்றும் மோயாறில் நீா்வரத்துத் அதிகரித்துள்ளது. அணைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை 194 கனஅடியாக இருந்த நீா்வரத்து, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் 1,124 கன அடியாக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அணை நிலவரம்:

சனிக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 44.54 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடி. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 205 கன அடி வெளியேற்றப்படுகிறது.