மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவானியில் சாக்கடையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பவானியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகே சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

Updated On :6 நவம்பர் 2024, 9:16 pm

பவானியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகே சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பவானி - அந்தியூா் சாலையில் காடையம்பட்டி, டாஸ்மாக் மதுக்கடை முன்பாக உள்ள சாக்கடைக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்ட மது அருந்த வந்தவா்கள் டாஸ்மாக் ஊழியா்களிடம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பவானி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தது யாா் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. சுமாா் 50 வயது இருக்கலாம். மது அருந்திவிட்டு சென்றபோது, சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.