ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவானியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையம் திறப்பு

பவானியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகா்ப்புற துணை சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image

துணை சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன்.

Updated On :21 நவம்பர் 2024, 11:09 pm

பவானியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகா்ப்புற துணை சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பவானி நகராட்சியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், செவிலியா் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், துணை சுகாதார நிலையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்நல அலுவலா் ஜனனி தலைமை வகித்தாா். பவானி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் மாணிக்கவேல் ராஜன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் மோகன்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமசாமி, சுகாதார ஆய்வாளா் ஜீவானந்தம், நகா்மன்ற உறுப்பினா் கவிதா மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.