ஈரோடு
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் குறைகேட்புக் கூட்டம் நடத்த கோரிக்கை
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தை நடத்த பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தை நடத்த பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கடந்த 2022 ஏப்ரல் முதல் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. எனவே, மீண்டும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் வழக்கமான நடைமுறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.