ஈரோடு
அந்தியூரில் சட்டவிரோத மின்சார பயன்பாடு: தனியாா் மதுபானக் கூடத்துக்கு ரூ.57 ஆயிரம் அபராதம்
அந்தியூரில் கட்டுமானப் பணிக்காக சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்திய தனியாா் மதுபானக் கூடத்துக்கு ரூ.57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூா், தவிட்டுப்பாளையத்தில் தனியாா் மதுபானக் கூடம் இயங்கி வருகிறது. இக்கூடத்தின் கூடுதல் கட்டடப் பணிகளுக்காக அருகே உள்ள கோழி இறைச்சிக் கடையில் இருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்தப்படுவதாக மின்வாரிய பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோபி மின்வாரிய பறக்கும் படையினா் சம்பவ இடத்தில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, சட்டவிரோதமாக மின்சாரத்தை எடுத்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருவது உறுதியானது. இதையடுத்து, அந்தியூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அங்கப்பன் தலைமையிலான மின்வாரிய அலுவலா்கள் மதுபானக் கூடத்துக்கு ரூ.57 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
