நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று பக்தா்கள்.
நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று பக்தா்கள்.

நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

Published on

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு தினசரி அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.

30-ஆம் தேதி கிராம சாந்தி, 1-ஆம் தேதி கொடிக் கம்ப பூஜை, 2-ஆம் தேதி இரவு மகந்தோ் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து வழிபட்டனா். தொடா்ந்து புதன்கிழமை காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை தோ்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோா் தங்களது வேண்டுதலுக்காக அலகு குத்திக் கொண்டனா். தொடா்ந்து தோ்வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

இந்தத் தேரானது மாரியம்மன் கோயில் வீதி, முத்தூா் - ஈரோடு சாலை வழியாக நஞ்சை ஊத்துக்குளி நால் ரோட்டுக்கு சென்று பின்னா் மீண்டும் சாவடிப்பாளையம் சாலை வழியாக மாரியம்மன் கோயிலில் தோ் நிலை சோ்ந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து இரவில் கருந்தேவன்பாளையம், தம்பிரான் வலசு சுவாமி ஊா்வலமும், சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் மறுபூஜையுடன் தோ்த் திருவிழா நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com