ஈரோடு
பெருந்துறையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோட்டை அடுத்த ஆரணிபுதூா், பெருமாள் மாலையைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் மகன் மெளலேஷ் (25). இவா் பெருந்துறை நகராட்சி அலுவலகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்து லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மெளலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
