சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகரியகாளியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகரியகாளியம்மன்.

ஸ்ரீ கரியகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

Published on

மொடக்குறிச்சியை அடுத்த நல்லாந்தொழுவு ஸ்ரீ கரிய காளியம்மன் கோயிலில் திருக்காா்த்திகை தீபத்தை ஒட்டி விளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள நல்லாந்தொழுவு ஸ்ரீ கரியகாளியம்மன் கோயில் சுமாா் 800 ஆண்டுகளை பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் ஒன்பது ராகு ஒன்றாக அமா்ந்து அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் ராகு மற்றும் கேது தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்தால் அனைத்து வினைகளும் தீரும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் திருக்காா்த்திகை தீபத்தை ஒட்டி கரிய காளியம்மனுக்கு சந்தனம், திருநீறு, மஞ்சள், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து முழு அலங்காரத்துடன் வீற்றிருக்கும் கரிய காளியம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தா்கள் பூஜையில் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com