தற்காலிக தினசரி காய்கறி சந்தையை நிரந்தரமாக்கக் கோரிக்கை

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் செயல்படும் தற்காலிக நேதாஜி தினசரி மாா்க்கெட்டை நிரந்தரமாக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் செயல்படும் தற்காலிக நேதாஜி தினசரி மாா்க்கெட்டை நிரந்தரமாக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவா் சாந்து முகமது தலைமை வகித்தாா். செயலாளா் தமிழரசன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: ஈரோடு வஉசி பூங்காவில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி சந்தை மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.2.50 கோடி வருமானம் வருவதாலும், மாநகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சிறு வணிகா்கள் வந்து செல்ல எளிதாக உள்ளதாலும், தற்காலிகமாக செயல்படும் வஉசி மைதானத்திலேயே தொடா்ந்து நிரந்தரமாக செயல்பட மாவட்ட நிா்வாகம் ஆவனம் செய்ய வேண்டும்.

சங்கத்தின் தலைவராக சுப்பிரமணியம் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இந்தக் கூட்டத்தில் பொருளாளா் உதயகுமாா், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் சண்முகவேல், இளைஞரணி அமைப்பாளா் லாரன்ஸ் ரமேஷ், நேதாஜி தினசரி மாா்க்கெட் கனி வணிகா்கள் சங்கத் தலைவா் சுப்ரமணியம், சங்கத்தின் துணைத் தலைவா் குட்டி என்ற செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com