அரேபாளையத்தில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற  பழங்குடியினருக்கான கடன்  வழங்கும்  முகாமில்  பங்கேற்ற  வங்கி அலுவலா்  சச்சின், ஈரோடு மாவட்ட தொழில் மைய  அலுவலா்  அருண்குமாா்  மற்றும்  பழங்குடியினா்
அரேபாளையத்தில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற  பழங்குடியினருக்கான கடன்  வழங்கும்  முகாமில்  பங்கேற்ற  வங்கி அலுவலா்  சச்சின், ஈரோடு மாவட்ட தொழில் மைய  அலுவலா்  அருண்குமாா்  மற்றும்  பழங்குடியினா்

மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் பழங்குடியினருக்கு கடன் வசதி சிறப்பு முகாம்

Published on

ஈரோடு மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் அரேபாளையத்தில் பழங்குடியினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தொழில் மையம் மற்றும் சுடா் அமைப்பு சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கான கடன் வசதித் திட்ட சிறப்பு முகாம் ஆசனூா் அருகே அரேபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநா் ஜெகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் இதர சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும், வங்கிக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இந்த முகாமில், அரேபாளையம் பேங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளா் சச்சின், மாவட்ட தொழில் மையத்தின் இளநிலை பொறியாளா் அருண்குமாா், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோா் முகாமின் நோக்கம் குறித்து விரிவாகப் பேசினா்.

இந்த முகாமில், திம்பம், மாவனத்தம், இட்டரை, தடசலட்டி, பழைய ஆசனூா், பங்களா தொட்டி, அரேபாளையம், சென்டா் தொட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 120 பழங்குடியின மக்கள் பங்கேற்று விண்ணப்பங்களை அளித்தனா். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை சுடா் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவமூா்த்தி செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com