கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

Published on

பவானியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தா்களைப்போல புகுந்து மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பவானி, பெருமாள்புரத்தில் உள்ள விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களைப்போல புகுந்த கும்பல், 3 மூதாட்டிகளிடம் 12 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றது.

இது குறித்த புகாரின்பேரில் பவானி காவல் துணை கண்காணிப்பாளா் ரத்தினகுமாா், பவானி காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், கோவை மாவட்டம், மதுக்கரை, அட்லாண்டிக் நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மகேந்திரன் (33), இவரது மனைவி லட்சுமி (33), அதே பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் மனைவி பொன்மணி (32), சூலூா், பட்டினப்புதூரைச் சோ்ந்த ஜேம்ஸ் மனைவி ஜோதி (40) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஃபேஸ்புக் பக்கத்தில் கோயில் கும்பாபிஷேகம் குறித்த தகவலைத் தெரிந்து கொண்ட இவா்கள், கோவையிலிருந்து காரில் பவானிக்கு வந்த மூதாட்டிகளைக் குறிவைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்டது திருவிழாவில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் மூலம் உறுதியானது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 பவுன் நகை, காரை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com