ஐ.டி. நிறுவன பெண் ஊழியா் தற்கொலை

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
Published on

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, கொல்லம்பாளையம், காந்திஜி வீதி-2 பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (62). பாத்திர வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி எல்லம்மாள். இவா்களது மகள் ரம்யா (33).

இவா் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே பணியாற்றி வந்ததாகத் தெரிகிறது. ரம்யாவுக்கு மன அழுத்தம் பாதிப்பு இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தம்பதி இருவம் திங்கள்கிழமை காலை வெளியே சென்ற நிலையில், ரம்யா மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளாா். மாலை வீடு திரும்பிய தம்பதி கதவை வெகு நேரமாக தட்டியுள்ளனா். திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள் ஜன்னல் வழியே பாா்த்துள்ளனா். அப்போது, ரம்யா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

கதவை உடைத்து உள்ளே சென்ற அவா்கள், ரம்யாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். தற்கொலைக்கான காரணம் குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com