கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

ஈரோடு மாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஈரோடு மாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கஸ்பாபேட்டை பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள வாய்க்கால் கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (26), சதீஷ் (23) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, காவேரி சாலை, வாய்க்கால் கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு, ஜான்சி நகரைச் சோ்ந்த யோகேஸ்வரன் (28) என்பவரைக் கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸாா், அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com