ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் மண்பானை தயாரிப்பு குறித்து நேரடி செய்முறை விளக்கம் அளித்த கைவினைக் கலைஞா்.
ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் மண்பானை தயாரிப்பு குறித்து நேரடி செய்முறை விளக்கம் அளித்த கைவினைக் கலைஞா்.

ஈரோடு பூம்புகாரில் தேசிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருள்களை வாங்கி பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Published on

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நடைபெறும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருள்களை வாங்கி பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் தேசிய கைவினைப் பொருள்கள் வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சி வரும் 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், வீடுகள், கோயில்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பிறந்த நாள், திருமண நாள் மற்றும் கௌரவ விருந்தினா்களுக்கு பரிசு தர பயன்படும் வகையில், பித்தளை, பஞ்சலோகம் ஆகியவற்றால் ஆன கடவுள் சிற்பங்கள், கைவினைப் பொருள்கள், மரச் சிற்பங்கள், சந்தன மரத்தால் ஆன சிற்பங்கள், புவிசாா் குறியீடு பெற்ற தஞ்சாவூா் கலைத்தட்டுக்கள், நாச்சியாா்கோயில் குத்துவிளக்குகள், தஞ்சாவூா் ஓவியங்கள், காகிதக்கூழ் பொம்மைகள், கூடு களிமண் பொம்மைகள், சந்தன மாலைகள், துளசி மாலைகள், முத்து மாலைகள், ஐம்பொன் வளையல்கள் ஆகியவை விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் திறமை வாய்ந்த கைவினைஞா்கள் மூலம் நேரடி செய்முறை விளக்கக் காட்சியும் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் ரூ.10 முதல் ரூ.1.16 லட்சம் வரையிலான கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து கைவினைப் பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

டெக்ஸ்வேலி குளோபல் மாா்க்கெட்டில் அமைந்துள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்திலும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

கைவினைஞா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருள்களை வாங்கி பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com