ஈரோடு மாவட்டத்தில் 12 புதிய கிராம ஊராட்சிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதியில் உள்ள 3 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Published on

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதியில் உள்ள 3 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள 3 கிராம ஊராட்சிகளை பிரித்து புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி 5 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி பா்கூா், குட்டையூா், தாமரைக்கரை, தேவா்மலை, கோவில்நத்தம் ஆகிய 5 புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேபோல சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூா் மலைப் பகுதியில் குத்தியாலத்தூா் ஊராட்சியும் 5 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடம்பூா், பவளக்குட்டை, இருட்டிபாளையம், கரளயம், அரிகியம் ஆகிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோல தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தாளவாடி ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு தாளவாடி, தொட்டகாஜனூா் ஆகிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குத்தியாலத்தூா் ஊராட்சியில் 48 குக்கிராமங்களும், பா்கூா் ஊராட்சியில் 34 குக்கிராமங்களும், தாளவாடி ஊராட்சியில் 12 குக்கிராமங்களும் இருந்தன. இந்த 3 ஊராட்சிகளிலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்னா். இந்த

ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம் மலைப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு திட்டங்களை எளிதில் பெற முடியும் என மலை கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது இந்த ஊராட்சிகளுக்கு தனித்தனியாக வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஊராட்சிகளுக்கு தனித்தனியாக ஊராட்சி அலுவலகம் கட்டவும், ஊராட்சி செயலா்கள் நியமிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com