கோபி அருகே கஞ்சா செடி பயிரிட்டு விற்பனை செய்த பெண் கைது

கோபி அருகே கஞ்சா செடி பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோபி அருகே கஞ்சா செடி பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், பங்களாப்புதூா் அருகே உள்ள கொங்கா்பாளையம் பாப்பாங்காட்டு தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி தேவி (57). இவா், பங்களாப்புதூா் குண்டேரிபள்ளம் தடுப்பணை அருகில் புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு அறுவடை செய்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன் மற்றும் காவலா்கள் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை மாலை சென்று அங்கு பயிரிடப்பட்டிருந்த 16 கஞ்சா செடிகள், பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றி தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com