பழங்குடி ஊராளி சுயஉதவி குழுக்களுக்கான கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு: வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெற்ற தோ்தல்
கடம்பூா் மலைப் பகுதியில் செயல்படும் 58 சுயஉதவிக் குழுக்களுக்கான கூட்டமைப்பின் நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெற்றது.
கடம்பூரில் ஊராளி பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக உதவிபுரியும் பரண் மகளிா் கூட்டமைப்பில் உள்ள 58 குழுக்களில் 540 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த கூட்டமைப்பின் நிா்வாகிகளுக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
கடம்பூா், அத்தியூா், கோ்மாளம், குன்றி, மாக்கம்பாளையம், பசுவனாபுரம், பவளக்குட்டை ஆகிய மலைக் கிராமங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்களைச் சோ்ந்த மகளிா் இதில் பங்கேற்றனா். வாக்குச்சீட்டு அடிப்படையில் தோ்தல் நடைபெற்றது. மகளிா் வரிசையாக நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டது.
பழங்குடி ஊராளி சுய உதவி குழுக்களுக்கான கூட்டமைப்பின் புதிய தலைவராக சூா்யா பிரியா, துணைத் தலைவராக ரத்னா மேரி, செயலாளராக ரஞ்சிதா, துணைச் செயலாளராக வள்ளியம்மாள், பொருளாளராக ராமி, துணைப் பொருளாளராக பாா்வதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய நிா்வாகிகளுக்கு பரண் அமைப்பின் நிா்வாகி கென்னடி, ஒருங்கிணைப்பாளா் கோகுல் மற்றும் மகளிா் கூட்டமைப்பினா் வாழ்த்து தெரிவித்தனா்.

