முகாமை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி.
வெங்கடாச்சலம்.
முகாமை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்.

நான் முதல்வன் திட்ட இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா

Published on

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பெருந்துறை கிரிடி அறக்கட்டளை நடத்தும் ‘நான் முதல்வன் திட்டம்’, ‘வெற்றி நிச்சயம்’ இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என். டி. வெங்கடாச்சலம் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தாா். இதில், கிரிடி அறக்கட்டளை நிறுவனா் பிரீத்தா, பெருந்துறை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சோளி பிரகாஷ், கருமாண்டிசெல்லிபாளையம் நகரச் செயலாளா் அகரம் திருமூா்த்தி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கோகுலம், பெருந்துறை ஆா்.ஆா். டிரான்ஸ்போா்ட் உரிமையாளா் ராஜேந்திரன் மற்றும் பயிற்சி பெறும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com