பா்கூா் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருள்கள ஏலம் தொடக்கம்

Published on

பா்கூா் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருள்கள ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.

பா்கூா் மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் விளைபொருள்களை சமதளப் பகுதிக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவதில் சிரமம் நிலவி வந்தது. இதையடுத்து, பா்கூா் மற்றும் சுற்றுவட்டார மலைவாழ் மக்களின் நலன் கருதி ஊசிமலையில் துணை வேளாண் விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டது.

இங்கு வியாழக்கிழமை தொடங்கிய மக்காச்சோளம், சோளம், உளுந்து, தட்டைப் பயறு, பச்சைப் பயறு, அவரை, தேங்காய், தேங்காய்ப் பருப்பு, பருத்தி, நிலக்கடலை, மஞ்சள் மற்றும் ராகி உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்குமான முதல் மறைமுக ஏலத்தை அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா்.

பா்கூா் சுற்றுவட்டார விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இந்நிகழ்ச்சியில், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் எம்.ஞானசேகா், பா்கூா் ஒன்றிய திமுக செயலாளா் ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் நடைபெறும் எனவும், நியாயமான எடை, போட்டி விலை, உடனடி பணம், பொருளீட்டுக் கடன், சேமிப்பு வசதிகள், 500 மற்றும் 250 மெட்ரிக் டன் கிடங்குகள், 500 மெட்ரிக் டன் குளிா்பதன கிடங்கு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com