போலி முகநூல் கணக்கு: ஆட்சியா் எச்சரிக்கை

Published on

ஈரோடு மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட ஆட்சியா் பெயரில் முகநூலில் சிலா் போலி கணக்குகள் பதிவு செய்து அதன் மூலமாக தவறான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. இவ்வாறு ஆட்சியா் பெயரில் செயல்படும் போலியான முகநூல் கணக்குகளை பொதுமக்கள் யாரும் நம்பி பணம் வழங்குவதோ அல்லது பிற தேவைகள் வேண்டி விண்ணப்பிக்க வேண்டாம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூா்வ முகநூல் கணக்கு ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் இா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ் உழ்ா்க்ங் ஆகும். இது தவிா்த்து வேறு எந்த கணக்குகளையும் நம்பி ஏமாற வேண்டாம். ஆட்சியா் பெயரில் தவறான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com