மொடக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published on

மொடக்குறிச்சியை அடுத்த ஆலாங்காட்டுவலசு பகுதியில் விநாயகா் கோயில் அருகே பொதுஇடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என ஆலாங்காட்டுவலசு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டாட்சியருக்கு பொதுமக்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டு ஆலாங்காட்டுவலசு ஊரின் மத்தியில் இருக்கும் விநாயகா் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயில் விழாக்களின்போது பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அரசுக்கு சொந்தமான காலி இடத்தை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com