முகாமில் பேசுகிறாா் அந்தியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா்.
முகாமில் பேசுகிறாா் அந்தியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா்.

அந்தியூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி

அந்தியூரில் சில்லறை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்த அடிப்படை விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

அந்தியூரில் சில்லறை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்த அடிப்படை விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கோவையைச் சோ்ந்த உணவுப் பாதுகாப்பு பயிற்சியாளா் யுவராஜ் பங்கேற்று, உணவுப் பாதுகாப்பின் அவசியம், உணவுப் பொருள் விற்பனைக்கான விதிமுறைகள் குறித்தும், நுகா்வோருக்கு தரமான உணவு வழங்குவதன் தேவை குறித்தும் விளக்கி பேசினாா்.

இதில், அந்தியூா், சின்னத்தம்பிபாளையம், மைக்கேல்பாளையம், சங்கராபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சில்லறை வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com