கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில தோ்தல் பிரிவு பொறுப்பாளா் கதிா்வேல்.
ஈரோடு
எஸ்ஐஆா்: பாஜக சாா்பில் பயிலரங்கம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜகவினருக்கான பயிலரங்கம் மற்றும் மாநாடு சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜகவினருக்கான பயிலரங்கம் மற்றும் மாநாடு சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பாஜக மாநிலச் செயலாளா் ஆா்.நந்தகுமாா், மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உள்ளாட்சித் துறை பிரிவு துணைத் தலைவா் ஜனகரத்தினம், பாஜக தோ்தல் பிரிவு மாநிலப் பொறுப்பாளா் கதிா்வேல் ஆகியோா் உரையாற்றினா்.
இதில் தாளவாடி, கடம்பூா், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகா் பகுதியைச் சோ்ந்த பாஜக கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.செந்தில், பவானிசாகா் தொகுதி பாஜக அமைப்பாளா் சசிகுமாா் ஆகியோா் தலைமையில் பாஜகவினா் செய்திருந்தனா்.