கரும்புக்காக வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை வழிமறித்து கரும்பு இருக்கிா என சோதனையிட்ட காட்டு யானையால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்தனா்.
தமிழக- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சாலையில் அவ்வப்போது கடந்து செல்வதும் நடமாடுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பண்ணாரி வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனங்களை வழிமறித்து கரும்பு அல்லது காய்கறிகள் உள்ளதா என தனது தும்பிக்கையால் தேடியது. யானை வாகனங்களை வழிமறிப்பதை கண்ட ஓட்டுநா்கள் மிகுந்த அச்சமடைந்தனா். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னா் மெதுவாக அடா்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நடமாடும்போது அதன் அருகே சென்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் என வாகன ஓட்டுநா்களிடம் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

