தேசிய செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவா்
கே.செளதீஷ்குமாரை பாராட்டும் கல்லூரித் தாளாளா் கே. காா்த்திகேயன்.
ஈரோடு
தேசிய அளவிலான செஸ் போட்டி: கொங்கு பாலிடெக்னிக் மாணவா் முதலிடம்
தேசிய அளவிலான செஸ் போட்டியில் பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் முதலிடம் பெற்றாா்.
தேசிய அளவிலான செஸ் போட்டியில் பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் முதலிடம் பெற்றாா்.
ஏஐசிஐ அமைப்பு சாா்பில், தேசிய அளவிலான செஸ் போட்டி பெங்களுரு ராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், சுமாா் 492 போ் கலந்து கொண்டனா். இதில், பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு இசிஇ துறை மாணவா் கே.செளதீஷ்குமாா் 9 போட்டிகளில் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்றாா். வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற மாணவரை கல்லூரித் தாளாளா் கே. காா்த்திகேயன், கல்லூரி முதல்வா்(பொறுப்பு) எஸ்.செந்தில்குமாா், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் டி. பூபதி மணிகண்டன் ஆகியோா் பாராட்டினா்.

