

பாட்னா: பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான அனைத்திந்திய குடிமைப் பணிகள் தடகள சாம்பியன்ஷிப்பில் ஈரோடு மாவட்டம், நல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியை குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் தேசிய அளவிலான அனைத்திந்திய குடிமைப் பணிகள் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் டிச. 13-இல் தொடங்கி இம்மாதம் 15 வரை நடைபெறுகிறது. அதில், ஈரோடு மாவட்டம், நல்லூர் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் விஜயலக்ஷ்மி பங்கேற்றுள்ளார்.
குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்ற 29 போட்டியாளர்களுக்கு மத்தியில் அதிக புள்ளிகள் பெற்று தங்க வென்று விஜயலக்ஷ்மி சாதனை படைத்தார். மேலும், வட்டு எறிதல் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையிலிருந்து ஆசிரியை ஒருவர், தேசிய அளவிலான அனைத்திந்திய குடிமைப் பணிகள் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கெஏற்று 2 பதக்கங்களை வென்றிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.