ஈரோடு
கிராவல் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்
அந்தியூா் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பவானி: அந்தியூா் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
அந்தியூா் - அத்தாணி சாலையில் தாசலியூா் பிரிவு அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்தியூரில் இருந்து வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா். லாரி ஓட்டுநா் திடீரென கீழே குதித்து தப்பினாா். சந்தேகமடைந்த போலீஸாா் லாரியில் சோதனை மேற்கொண்டபோது, கிராவல் மண் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய ஓட்டுநரையும், லாரி உரிமையாளரையும் தேடி வருகின்றனா்.
