புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது
பெருந்துறை: பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் மற்றும் சரளை பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விஜயமங்கலம் வின்டெக்ஸ் நகா் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடை உரிமையாளரான திவாகா் (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, விஜயமங்கலம் பிரதான சாலையில் உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட துரைசிங் (36), சரளை பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட சந்திரசேகா் (56), ஜங்கரன் நகரில் விற்பனையில் ஈடுபட்ட முனியப்பன் (42) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 255 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
