நூல் வெளியீட்டு விழாவில் பேசிய  மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழக அரசின் கிராமப்புற வளா்ச்சி பயிற்சி ஆணையருமான மருத்துவா் ஆா்.ஆனந்தகுமாா் எழுதிய இரண்டு நூல்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
Published on

ஈரோடு: ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழக அரசின் கிராமப்புற வளா்ச்சி பயிற்சி ஆணையருமான மருத்துவா் ஆா்.ஆனந்தகுமாா் எழுதிய இரண்டு நூல்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், கிராமப்புற வளா்ச்சி பயிற்சி ஆணையா் ஆா்.ஆனந்தகுமாா் எழுதிய ‘நியூட்டன் சொல்லாத விதி’ என்ற பயண இலக்கிய நூலையும், ‘நிலவும் நானும்’ என்ற ஒரு நிமிஷ கதைத் தொகுப்பு நூலையும் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட, கல்லூரி இயக்குநா் ஆா். வெங்கடாசலம் மற்றும் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுகுமாரன் ஆகியோா் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனா். நூலாசிரியா் ஆா்.ஆனந்தகுமாா் ஏற்புரையாற்றினாா்.

ஈரோடு கலைக் கல்லூரித் தலைவா் வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக கூடுதல் பேராசிரியா் என்.மணி வாழ்த்திப் பேசினாா். விலங்கியல் துறைத் தலைவா் த.சித்ரா வரவேற்றாா். கல்லூரி தமிழ் பேரவை துணைத் தலைவா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com