மறுமுத்திரையிடப்படாத 34 எடை அளவுகள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத 34 எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத 34 எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள், முத்திரை ஆய்வாளா்கள் ஆகியோா் கூட்டாக ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதி, கிருஷ்ணம்பாளையம் சாலை, வீரப்பன்சத்திரம், சத்தி சாலை, சூளை பகுதி தெருவோர பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள், பழைய பொருள்கள் வாங்கும் கடைகளில் பயன்படுத்தப்படும் எடை அளவுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் மறுமுத்திரையிடாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் 6, தராசு கற்கள் 7, மேஜை தராசு 1 என 14 எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல கோபி கலிங்கியம் காமராஜா் தினசரி வாரச்சந்தையில் நடந்த கூட்டாய்வில் மறுமுத்திரையிடாத 10 மின்னணு தராசுகள் உள்பட 20 எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com