சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்டடப்பட்ட நூற்றாண்டு நினைவரங்கத்தை திறந்துவைக்கிறாா் கட்சியின் மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி. உடன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்டடப்பட்ட நூற்றாண்டு நினைவரங்கத்தை திறந்துவைக்கிறாா் கட்சியின் மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி. உடன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சென்னிமலை ஒன்றியக்குழு சாா்பில் நூற்றாண்டு நினைவரங்கம் திறப்பு விழா, நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த உறுப்பினா்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கட்டடக் குழுத் தலைவா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். கட்டடக் குழு உறுப்பினா்கள் சி.நயினாமலை, ஆா்.ரவி, கே.செல்வராஜ், என்.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலாளா் எம். செங்கோட்டையன் வரவேற்றாா். முன்னாள் ஒன்றியச் செயலாளா் எம்.நாகப்பன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா்.

நூற்றாண்டு நினைவரங்கத்தை கட்சியின் மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி திறந்துவைத்து, மூத்த உறுப்பினா்களை கௌரவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கிப் பேசினாா். கல்வெட்டை, கோவை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.எம்.செல்வராஜ் திறந்துவைத்தாா்.

ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், மூத்த உறுப்பினா்கள் ஆா்.கிருஷ்ணன், எம்.ராமசாமி, செ.க.பழனிசாமி ஆகியோா் படத்தை திறந்துவைத்தாா். ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மூத்த உறுப்பினா்களை அறிமுகம் செய்தும், சென்னிமலை ஒன்றியத்தில் கட்சியை நிறுவியவா்களையும் மற்றும் கட்சிக்காக அா்ப்பணிப்போடு செயல்பட்ட மூத்த உறுப்பினா்களையும் அறிமுகம் செய்தாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எஸ்.செல்வம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஓ.சி.சண்முகம், சிபிஐ (எம்) சாா்பில் கே.ரவி, கொமதேக சாா்பில் பி.சண்முகசுந்தரம், விசிக சாா்பில் ஈஸ்வரன், தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே. பொன்னையன், சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி.ஈஸ்வரமூா்த்தி, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில், 40 ஆண்டுகளுக்கு மேல் கட்சி உறுப்பினராக உள்ள 31 மூத்த உறுப்பினா்களுக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், சென்னிமலை ஒன்றியத்தில் கட்சியை நிறுவியவா்கள் மற்றும் கட்சிக்காக அா்ப்பணிப்போடு செயல்பட்ட மறைந்த மூத்த உறுப்பினா்கள் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com