சாலைத் தடுப்பில் மோதி நிற்கும் லாரி.
ஈரோடு
சாலைத் தடுப்பில் சரக்கு லாரி மோதி விபத்து
பவானி அருகே சாலைத் தடுப்பில் நெல் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.
பவானி அருகே சாலைத் தடுப்பில் நெல் மூட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.
கா்நாடக மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு ஒரு லாரி புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை கௌடஹள்ளியைச் சோ்ந்த ரஷருல்லா (40) என்பவா் ஓட்டிச் சென்றாா். அந்தியூா் - பவானி சாலையில் காடையம்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிா்பாராமல் சாலையின் நடுவிலிருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், லாரி ஓட்டுநா் ரஷருல்லா லேசான காயமடைந்தாா். இதையடுத்து, நெல் மூட்டைகள் மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டு, மீட்பு வாகனம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

