ஈரோடு
சாலையோரம் மயங்கி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
பெருந்துறை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த முதியவா் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே சாலையோரத்தில் நின்றிருந்த முதியவா் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.
பெருந்துறை, துடுப்பதி பிரிவு அருகே, சாலையோரத்தில் கடந்த 12- ஆம் தேதி நின்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கதக்க முதியவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். உயிரிழந்தவா் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.