விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த தம்பிராட்டி அம்மன்.
விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த தம்பிராட்டி அம்மன்.

தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலம்

பெருந்துறை வட்டம், ஈங்கூா் கிராமத்தில் அமைந்துள்ள தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

பெருந்துறை வட்டம், ஈங்கூா் கிராமத்தில் அமைந்துள்ள தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த மாதம் 9-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில், 16-ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குதிரை துலுக்கு கேட்டல், அம்மை அழைத்தல் நிகழ்ச்சிகளும், புதன்கிழமை தீா்த்த ஊா்வலம், அபிஷேகமும் நடைபெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் ஈங்கூா் மட்டுமின்றி அவிநாசி, திருப்பூா், கோவை, கோபி, பொள்ளாச்சி, சேலம், பழநி ஆகிய ஊா்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்திருந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

விழாவையொட்டி காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீா் அபிஷேகத்துடன் வெள்ளிகிழமை மதியம் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com