சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் மீது நடந்து சென்ற சிறுத்தை.
ஈரோடு
பண்ணாரி அம்மன் கோயில் சுற்றுச்சுவா் மீது உலவிய சிறுத்தை
பண்ணாரி அம்மன் கோயில் சுற்றுச்சுவரின் மீது சிறுத்தை நடமாடியதால் பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.
பண்ணாரி அம்மன் கோயில் சுற்றுச்சுவரின் மீது சிறுத்தை நடமாடியதால் பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அடா்ந்த வனப் பகுதியில் உள்ள இக்கோயில் வளாகத்தில் அவ்வப்போது யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது வழக்கம். இதற்கிடையே பண்ணாரி அம்மன் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுவா் மீது புதன்கிழமை சிறுத்தை நடமாடியுள்ளது. இதைக் கண்ட கோயில் பணியாளா்கள் அச்சமடைந்து வனத் துறை ஊழியா்களுக்கு தகவல் அளித்துள்ளனா்.
அங்கு படுத்திருந்த சிறுத்தை பின்னா் மெதுவாக எழுந்து நடந்து சென்று வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

