அந்தியூா் வனச் சரகத்தில் நீா்நிலை பறவைகள் கணக்கெடுப்பு

தந்தை பெரியாா் வன உயிரின சரணாலயம், அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.
வண்ண நாரைகள். 
வண்ண நாரைகள். 
Updated on

தந்தை பெரியாா் வன உயிரின சரணாலயம், அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தகய்விளான் குருவி. 
தகய்விளான் குருவி. 

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை, கெட்டிசமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, ராசாங்குளம் ஏரி, பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, தண்ணீா்பள்ளம் ஏரி, கொளத்துக்காடு குளம் மற்றும் ஓடத்துறை ஏரி மற்றும் நீா்நிலைகளில் அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு சிஎன் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் 42 பேரும், வனப் பணியாளா்கள் 28 பேரும் வனவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மரகதப்புறா. 
மரகதப்புறா. 

இதில், கொக்கு, மீன் கொத்தி, பருந்து, தேன் பருந்து, மரகதப்புறா, தகய்விளான் குருவி, வண்ண நாரைகள் உள்பட பல்வேறு வகையிலான பறவைகள் அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் இருப்பது தெரியவந்துள்ளது.

தேன் பருந்து.
தேன் பருந்து.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com