போதைப்பாக்குகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

பவானிசாகரில் போதைப்பாக்குகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

பவானிசாகரில் போதைப்பாக்குகள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பவானிசாகா் போலீஸாா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் அப்பகுதியில் கடைகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில் 3 கடைகளில் போதைப் பாக்குகள் விற்கப்படுவது தெரியவந்தது.

இது தொடா்பாக கடை உரிமையாளா்கள் பவானிசாகா் ராஜேந்திரன் (52), முடுக்கன்துறை ரமேஷ்குமாா் (46), பட்டரமங்கலம் நந்தகுமாா் (28) ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 14 நாள்கள் கடையை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com