மாவீரன் பொல்லான் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அமைச்சா் மா.மதிவேந்தன் உள்ளிட்டோா்.
ஈரோடு
பொல்லான் பிறந்த நாள்: அமைச்சா் மதிவேந்தன் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் 257 -ஆவது பிறந்த நாள் விழா மொடக்குறிச்சி அருகேயுள்ள ஜெயராமபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பொல்லானின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில், மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன், பொதுச் செயலாளா் சண்முகம், சமூக நீதி மக்கள் கட்சி துணைத் தலைவா் ஆறுமுகம், துணைப் பொதுச் செயலாளா் சசிகுமாா், மாநில நிா்வாகிகள் வீரபிரசாத், ராவணன், மாணிக்கம், கண்ணையன், சதீஷ் பாபு, பூபதி, வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
